டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாராலிம்பிக்2020 போட்டிகள் இன்று தொடங்குகிறது. இதில், இந்தியா சார்பிர், தமிழகவீரர் மாரியப்பன் கொடி ஏந்தி செல்கிறார்.
2020ம் ஆண்டுக்கான ஒலிம்பிக்போட்டிகள் கொரோனாவால் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், சமீபத்தில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து முடிந்தன. அதைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி இன்று தொடக்கி செப்டம்பர் 5 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 163 நாடுகளில் இருந்து 4,537 வீரர்- வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். இந்தியா சார்பில் 54 பேர் கொண்ட அணி பங்கேற்கிறது.
பாராலிம்பிக்கில், வில்வித்தை, தடகளம், பேட்மிண்டன், சைக்ளிங், குதிரையேற்றம், 5 பேர் கால்பந்து, துப்பாக்கி சுடுதல், சிட்டிங் கைப்பந்து, நீச்சல், டேபிள் டென்னிஸ், வீல்சேர் கூடைப்பந்து உள்ளிட்ட 22 விளையாட்டுகளில் 540 போட்டிகள் நடைபெற உள்ளது.
டோக்கியோவில் இன்று தொடங்கும் விழாவில் கடந்த முறை உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தேசிய கொடியை ஏந்தி செல்ல உள்ளார். தமிழகத்தை சேர்ந்த உயரம் தாண்டுதல் வீரர் மாரியப்பன் தலைமையில் இந்திய அணி தொடக்க விழா அணிவகுப்பில் பங்கேற்க உள்ளது.