பெங்களூரு
இன்று கர்நாடகாவில் 1,161 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 1002 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.
கர்நாடகாவில் இன்று 1,161 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதுவரை 29,39,767 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இன்று 10 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 37,155 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 1,442 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 28,82,331 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 20,255 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கர்நாடகா மூன்றாம் இடத்தில் உள்ளது.
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 1,002 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதுவரை 20,03,342 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இன்று 13 பேர் உயிர் இழந்து இதுவரை 13,735 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 1,508 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 19,75,448 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 14,159 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் ஆந்திர மாநிலம் ஐந்தாம் இடத்தில் உள்ளது.