டில்லி
இன்று 12-18 வயதான சிறாருக்கான சைடஸ் கேடிலா நிறுவன கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்தியாவில் விரைவில் மூன்றாம் அலை கொரோனா தாக்குதல் ஏற்படும் எனவும் இது அதிகமாக சி?றார்களை தாக்கும் எனவும் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதையொட்டி சிறார்களுக்கான கொரோனா தடுப்பூசி சோதனைக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இதில் சைடஸ் கேடிலா நிறுவனத்தின் சைகோவ்டி என்னும் தடுப்பூசியும் அடங்கும்.
டி என் ஏ அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இந்த தடுப்பூசி நாடெங்கும் 28000 ஆர்வலர்களிடம் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் இந்த மருந்து 66.6% வரை திறனுள்ளது எனக் கண்டறியப்பட்டுள்ளதாக சைடஸ் கேடிலா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மருந்துக்கு அனுமதி அளிக்கக் கோரி கடந்த ஜூலை மாதம் 1 ஆம் தேதி நிறுவனம் விண்ணப்பித்தது.
இன்று இந்த தடுப்பூசிக்கு மத்திய அரசின் மருந்து கட்டுப்பாடு ஜெனரல் அலுவலகம் 12-18 வயதுடைய சிறாருக்கு போட் அவசர கால அனுமதி அளித்துள்ளது. இது உலகில் முதல் முதலாக இந்தியாவில் முழுவதுமாக உருவாக்கப்பட்ட டி என் எ அடிப்படையிலான தடுப்பூசி ஆகும். கேடிலா நிறுவனம் வருடத்துக்கு 10 கோடி முதல்12 கோடி டோஸ்கள் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இந்த தடுப்பூசி குறித்த 5 விவரங்கள் வருமாறு
- இந்திய அரசின் நுண்ணுயிர் துறையின் பங்களிப்புடன் கொரோனா பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இந்த தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சைகோவ்டி தடுப்பூசி தேசிய அளவிலான இரு கட்ட சோதனைகளில் தேர்ச்சி பெற்றுள்ளதாக ஒரு அதிகார பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது.
- இந்த மூன்று டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டோருக்கு கொரோனா வைரஸ்கள் உருவாகி அவை கொரோனா தாக்குதலை எதிர்க்கும் சக்தியை அளித்துப் பாதுகாக்கிறது. இதில் உள்ள டி ஏன் ஏ தொழில்நுட்பம் சிறாரின் உடலில் கொரோனாவுக்கு எதிரான சக்தியை எளிதாக அளிக்கிறது.
- மூன்றாம் கட்ட பரிசோதனையில் 28000 பேருக்கு மேல் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இடைக்கால ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. இந்த தடுப்பூசி 12-18 வயதான சிறாருக்கு 66.6% வரை திறனுள்ளதாகக் காணப்படுகிறது. இந்த சோதனையில் நடந்த ஆர்டி பிசிஆர் பரிசோதனையின் மூலமும் முதல் மற்றும் இரண்டாம் கட்ட சோதனையிலும் இந்த மருந்து மிகவும் பாதுகாப்பானது எனத் தெரியவந்துள்ளது.
- இந்த மருந்துகள் உருவாக்கம் மற்றும் சோதனையில் வெற்றி பெற்றதற்குத் தொற்று நோய் தொழில்நுட்ப மையம் சைடஸ் கேடிலா நிறுவன தடுப்பூசி ஆய்வு மையம், புனாவில் உள்ள நுண்ணுயிர் பயிலகம், உள்ளிட்ட பல அமைப்புக்களின் உதவி முக்கிய காரணமாகும் என நிறுவனம் அறிவித்துள்ளது.
- மேலும் இது குறித்து சைடஸ் கேடிலா நிறுவனத் தலைவர் பங்கஜ் ஆர் படேல், “ஒரு பாதுகாப்பான கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்க மேற்கொண்ட எங்களது .முயற்சி வெற்றி அடைந்துள்ளது. சைகோவ்ட் மருந்து மூலம் கொரோனாவை எதிர்த்து போராடமுடியும் என்பது தற்போது தெளிவாகி உள்ளது. உலகின் முதல் டி என் ஏ அடிப்படையிலான தடுப்பூசியை கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதாக இல்லை இதற்கு உதவி புரிந்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன்” எனக் கூறி உள்ளார்.