மும்பை

ந்தியாவில் முதல் முறையாக கொரோனாவை எதிர்த்துப் போராடும் அனைத்து ஊழியர்களுக்கும் குறைந்த விலையில் வீட்டு வசதி அளிக்க  மகாராஷ்டிர அரசு முன் வந்துள்ளது.

கொரோனாவால் நாடே அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பாதிப்படைந்தோர் எண்ணிக்கையில் மகாராஷ்டிர மாநிலம் முதல் இடத்தில் உள்ளது.  இந்த கொரோனாவை எதிர்த்துப் போராடும் பணியில்  பல்வேறு துறையைச் சார்ந்த ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.  அவர்கள் அரசு மற்றும் தனியார்த் துறையை சார்ந்தவர்கள் ஆவார்கள்

கடந்த 2020 ஆம் வருடம் மே மாதம் 29 ஆம் தேதி அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி சுகாதாரம், நிதித்துறை, உணவு மற்றும் வழங்கல் துறை, குடிநீர் வாரியம்,. சுத்திகரிப்பு உள்ளிட்டோர் கொரோனா போராளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளனர்.  இதைத் தவிர ஆஷா மக்கள் நலத் தொழிலாளிகள், காவல்துறையினர், துணை ராணுவத்தினர் மற்றும் தீயணைப்புத் துறையினரும் கொரோனா போராளிகள் ஆவர்.

இவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நாட்டில் முதல் முறையாக  மகாராஷ்டிர  சலுகை விலையில் வீட்டு வசதி அளிக்க முன்வந்து புதிய திட்டத்தை இயற்றி உள்ளது.  இதற்கு விண்ணப்பிப்போர்  கடந்த 15 வருடங்களாக மகாராஷ்டிர மாநிலத்தில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும்.   அந்த சான்றிதழுடன் கொரோனா போராளிகள் ஆன்லைன் மூலம் அரசுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த திட்டத்தின் கீழ் வரும் வீடுகள் புதிய மும்பையில் அமைந்துள்ளன.  தற்போது 4,488 வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவை குறைந்த வருவாய் பிரிவில் இருந்து உயர் வருவாய் பிரிவு வரை அனைத்து பிரிவுகளிலும் அமைந்துள்ளன.   வீடுகளை விட அதிக எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் கிடைத்தால் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு நடைபெற உள்ளது.