டெல்லி: நாடு முழுவதும் கடந்த 24மணி நேரத்தில் 32,937 பேர் புதிதாக கோவிட் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், 417 பேர் உயிரிழந்துள்ளனர். 35,909 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை கட்டுக்குள் இருந்தாலும், ஆகஸ்டு முதலே தொற்றின் பாதிப்பு ஏற்றம் இறக்கமாக இருந்து வருகிறது. தினசரி பாதிப்பு 20ஆயிரம் வரை வந்த நிலையில், மீண்டும் 40ஆயிரத்தை எட்டிய நிலையில், கடந்த சில நாட்களாக 30ஆயிரம் பிளஸ்-ஆக இருந்து வருகிறது.
இந்த நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 32 ஆயிரத்து 937 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,22,25,513 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று ஒரே நாளில் 417 பேர் சிகிச்சைபலனின்றி உயிரிழந்துள்ளதால், மொத்த கொரோனா உயிரிழப்பு 4,31,642 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.34% ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 35. 909பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,14,11,924 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 97.46 ஆக உயர்ந்துள்ளது.
தற்போதைய நிலையில், கொரோனா காரணமாக 3,81,947 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோர் விகிதம் 1.21% ஆக குறைந்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 54,58 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel