டில்லி

ந்தியாவில் நேற்று 33,212 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,22,25,175 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 33,212 அதிகரித்து மொத்தம் 3,22,25,175 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 421 அதிகரித்து மொத்தம் 4,31,674 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 35,497 பேர் குணமாகி  இதுவரை 3,14,03,959 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 3,79,562 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 4,797 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 63,92,660 ஆகி உள்ளது  நேற்று 130 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,35,039 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,710 பேர் குணமடைந்து மொத்தம் 61,89,933 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 64,219 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 18,582 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 36,90,123 ஆகி உள்ளது.  இதில் நேற்று 102 பேர் உயிர் இழந்து மொத்தம் 18,601 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 20,089 பேர் குணமடைந்து மொத்தம் 34,92,367 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,78,635 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 1,431 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 29,29,464 ஆகி உள்ளது  இதில் நேற்று 21 பேர் உயிர் இழந்து மொத்தம் 36,979 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,611 பேர் குணமடைந்து மொத்தம் 28,69,962 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 22,497 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,896 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 25,88,781 ஆகி உள்ளது  இதில் நேற்று 23 பேர் உயிர் இழந்து மொத்தம் 34,519 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,842 பேர் குணமடைந்து மொத்தம் 25,33,804 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 20,458 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 1,506 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 19,93,697 ஆகி உள்ளது.  நேற்று 16 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 13,647 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,835 பேர் குணமடைந்து மொத்தம் 19,60,350 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 17,865 பேர் சிகிச்சையில் உள்ளனர்.