
தற்போதைய தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் நடிகர் கதிர். மதயானை கோவூட்டம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான கதிர் அதன் பிறகு சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்தார்.
குறிப்பாக விக்ரம் வேதா , பிகில் போன்ற படங்களில் தன்னுடைய நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்து இழுத்தார் கதிர். தற்போது இவர் நடித்துள்ள யூகி என்ற படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.
UAN Film House, Juvis Productions, and AAAR Productions இந்த படத்தினை இணைந்து தயாரித்துள்ளனர்.
ஜாக் ஹாரிஸ் இந்த படத்தினை இயக்கியுள்ளார். கதிர், நரேன், நட்டி, பவித்ரா லக்ஷ்மி, கயல் அனந்தி, ஆத்மீயா உள்ளிட்ட நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
[youtube-feed feed=1]