சென்னை: 
றைந்த மருத்துவர் ஷண்முகப்பிரியாவுக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது.
மதுரை மாநகராட்சி அனுப்பானடி நகர்ப்புற ஆரம்ப சுகாதாரத்துறையில் பணிபுரிந்து வந்த 8 மாத கர்ப்பிணி மருத்துவர் சண்முகப்பிரியா.
கர்ப்பிணியாக இருந்தாலும் அவர் வழக்கம்போல் இந்த நெருக்கடியான கொரோனா தொற்று பரவிய காலத்தில் அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் பணிக்கு வந்து கொண்டிருந்தார்.
இந்நிலையில் அவருக்குக் கடந்த 3 நாட்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்குச் சிகிச்சை பலனளிக்காமல் கடந்த மே மாதம் எட்டாம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து இருந்தார்.
கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் உயிர்நீத்த மதுரையைச் சேர்ந்த மருத்துவர் சண்முகப்பிரியாவுக்கு, துணிவு மற்றும் சாகசத்திற்கான கல்பனா சாவ்லா விருதினை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கௌரவித்தார்.
கோட்டை கொத்தளத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இருந்து சண்முகப்பிரியாவின் கணவர் சண்முகப் பெருமாள் விருதினை பெற்றுக் கொண்டார்.