சென்னை: 
நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு மிக்க சுதந்திர தின நினைவு தூணை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.
இன்று இந்தியாவின் 75-வது சுதந்திர தினவிழா மிகவும் சிறப்பாக, கொரோனா விதிமுறைகளை கடைப்பிடித்துக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில்,தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற பின், 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, முதல்முறையாகச் சென்னை கோட்டையில் தேசிய கோடியை ஏற்றியுள்ளார்.அதன்பின் மக்களிடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றி பல்வேறு விருதுகளை வழங்கினார்.
இந்நிலையில்,75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை நேப்பியர் மேம்பாலம் அருகே சுதந்திர தின நினைவுத்தூணை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.இந்த நிகழ்வில் முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின்,திமுக அமைச்சர்கள்,அரசு அaதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த 59 அடி உயரம் கொண்ட தூணின் உச்சியில் நான்கு சிங்கங்களின் மேல் அசோக சக்கரம் உள்ளவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.குறிப்பாகத் துருப்பிடிக்காத வகையிலான உலோகத்தைக் கொண்டு ரூ.195 கோடியில் 10 நாட்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மேலும்,ராணுவத்தினரைப் போற்றும் விதமாக நான்கு ராணுவ வீரர்களின் சிலைகள் தூணைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ளது என்பது இதன் சிறப்பு அம்சமாகும்.