சென்னை: தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல் முறையாக இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சர் ‘ எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

சட்டப்பேரவை கூட்டம் நேற்று (ஆகஸ்டு 13ந்தேதி தொடங்கி செப்டம்பர் மாதம் 21-ம் தேதி வரை மொத்தம் 29 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்நாள் சட்டசபை கூட்டத்தில், தமிழக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, முதன்முறையாக, தமிழக சட்டப் பேரவையில் தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான காகிதமில்லா இ- பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து இன்று முதல் முறையாக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. தமிழக அரசின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் வேளாண்மை துறைக்காக தனி பட்ஜெட்டாக இன்று காலை 10 மணியளவில் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து பேசி வருகிறார்.
திமுக அரசின் வேளாண் பட்ஜெட் தமிழக விவசாயிகள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கோபாலபுரம் இல்லம் சென்று முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து, அவருடன் இணைந்து வந்து சட்டப்பேரவையில் வேளாண்பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.