சென்னை:
தமிழகச் சட்டமன்றத்தில் இன்று வேளாண் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.

திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு தமிழ்நாடு அரசு இவ்வாண்டு இரண்டு நிதிநிலை அறிக்கைகளில் சட்டமன்றப் பேரவையில் தாக்கல் செய்ய உள்ளது. தமிழ்நாடு அரசு வரலாற்றில் முதல் முறையாக வழக்கமான நிதிநிலை அறிக்கையோடு வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை சார்பாகத் தனியே ஒரு நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.
இதன்படி, நேற்று தமிழகச் சட்டமன்றத்தில் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து இன்று வேளாண் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.
Patrikai.com official YouTube Channel