சென்னை: மாற்றத்திற்கான பட்ஜெட்டை எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது என்று தமிழகஅரசின் நிதிநிலை அறிக்கை குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன் டிவிட் பதிவிட்டுள்ளார்.

ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் முதல் பட்ஜெட்டும், காகிதமில்லா இ-பெட்ஜெட்டை  இன்று சட்டப்பேரவையில்  நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

பட்ஜெட்டில் பெட்ரோல் மீதான வரி ரூ.3 குறைத்து அறிவித்து உள்ளதுடன் பல்வேறு அறிவிப்புகள், நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.  கூட்டுறவு சங்கங்கள் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் பெற்ற 2756 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்படும் உள்பட பல சலுகைகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இந்த பட்ஜெட் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நடிகர் கமல்ஹாசன் விமர்சித்து டிவிட் பதிவிட்டுள்ளார். அதில்,

 தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்பட்டவற்றுக்கும், பட்ஜெட்டில் இடம்பெற்றிருப்பவைகளுக்கும் இடையே ஏராளமான வித்தியாசங்கள் உள்ளன. மாற்றத்திற்கான பட்ஜெட்டை எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே எஞ்சுகிறது என்று  தெரிவித்துள்ளார்.