சென்னை: மதுரை, கோவையில் மெட்ரோ ரயில் இயக்கும் சாத்தியக்கூறு தொடர்பாக  அறிக்கைகள் தயார் செய்யப்படும் என பட்ஜெட்டில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்  இன்று (ஆக. 13) காலை 10 மணிக்கு இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையில் மெட்ரோ ரயில் திட்டம் குறித்து அவர் கூறியதாவது,

“மெட்ரோ ரயில் திட்டத்தில் கோடம்பாக்கம் முதல் பூந்தமல்லி புறவழித்தடத்துக்கான சேவைகள், 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அதாவது நான்கு ஆண்டுகளுக்குள் தொடங்கும்.

மெட்ரோ ரயில் திட்டத்தின் மொத்த இரண்டாம் கட்டமும் 2026 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கப்படும்.

அதே நேரத்தில், மெட்ரோ ரயில் திட்டத்தை, தாம்பரம் வழியாக விமான நிலையத்திலிருந்து கிளம்பாக்கம் பேருந்து முனையம் வரை நீட்டிக்கும் பணியை இந்த அரசு விரைவாகத் தொடங்கும்.

மதுரை, கோவையிங்ல  மெட்ரோ ரயில் திட்டத்தை அமைப்பதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கைகள் தயார் செய்யப்படும். கோவை மாவட்டத்தை பொறுத்தவரை மெட்ரோ ரயில் சேவை தொடங்குவது தொடர்பாக மத்திய அரசிடம் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்

இவ்வாறு அவர் தெரிவித்தார்.