சென்னை: ஆகஸ்டு 15ந்தேதி சுதந்திர தினத்தின்று கிராம சபைக்கூட்டம் நடத்தக்கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் கிராம சபை நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.

வழக்கமாக கிராமசபை கூட்டங்கள்  குடியரசு தினவிழா, சுதந்திர தினவிழா உள்பட  4 முக்கிய தினங்களில்  நடத்தப்படுவது வழக்கம். ஆனால், கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக கிராம சபை கூட்டங்களை நடத்த தமிழகஅரசு தடை செய்து வருகிறது. இந்த நிலையில், தற்போதும் ஆகஸ்டு 15ந்தேதி அன்று கிராமசபை கூட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக பஞ்சாயத்துராஜ் இயக்குனர் பிரவீன் நாயர் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கைஅனுப்பி உள்ளார்.

ஏற்கனவே கடந்த ஆண்டு அதிமுக அரசு கிராமசபை கூட்டங்களை நடத்த தடை விதித்தபோது, ஜனநாயக குரல்வளையை அதிமுக அரசு நசுக்குவதாக அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், தற்போது, அவரே கிராமசபை கூட்டம் நடத்துவதற்கு தடை விதித்துள்ளார்.