டில்லி
அரசு பொது காப்பிட்டு நிறுவனங்களில் 51% பங்குகளைத் தனியாருக்கு விற்கும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது
அரசு பொது காப்பீட்டு நிறுவனங்களைத் தனியார் மயமாக்க பாஜக அரசு நெடுங்காலமாக முயன்று வருகிறது. ஆனால் எதிர்க்கட்சிகளின் ஆட்சேபத்தினால் அதைச் செயல்படுத்தாமல் இருந்து வந்தது. இந்நிலையில் இந்நிறுவனங்களின் பங்கு விற்பனை குறித்த ஒரு மசோதாவை அரசு தாக்கல் செய்தது.
இந்த மசோதாவின்படி அனைத்து அரசு பொது காப்பீட்டு நிறுவனங்களின் பங்குகளில் 51% வரை தனியாருக்கு விற்க அரசுக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது. இவ்வாறு விற்பனை செய்யும்போது தனியார் ஆதிக்கம் இந்த நிறுவனங்களில் அதிகரித்து அவை மறைமுகமாகத் தனியார் மயமாகும்.
மக்களவையில் ஆளும் கட்சியான பாஜகவுக்குப் பெரும்பான்மை உள்ளதால் இந்த மசோதா அங்கு நிறைவேற்றப்பட்டது. இன்று மாநிலங்களவையில் இதே மசோதா கொண்டு வ்ரப்பட்ட்து. எதிர்க்கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் என்பதால் விவாதமின்றி 6 நிமிடங்களில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதனால் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டுள்ளன. எதிர்க்கட்சிகள் தங்களது எதிர்ப்பு வாதங்களைத் தெரிவிக்க முடியாமல் அவை ஒத்தி வைக்கப்பட்டது.