சென்னை: தமிழகத்தில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்பபதிவு தொடங்கியது. உயர்படிப்பு படிக்க விரும்புபவர்கள், இணையதளத்துக்கு சென்று விண்ணப்பிக்கலாம்.

கொரோனா தொற்று காரணமாக கல்வி நிறுவனங்கள் விண்ணப்பம் மற்றும் கல்வி போதனை, தேர்வு போன்ற அனைத்தையும் ஆன்லைன் மூலமேகவே நடத்தி வருகின்றன. இந்த நிலையில், கலை அறிவியல் மற்றும் பொறியியல், மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதையடுத்து,  பல்கலைக்கழகங்களில் பயிற்றுவிக்கப்படும் முதுகலைப் படிப்பான எம்.பி.ஏ., எம்.சி.ஏ படிப்புகளில் சேர இன்று முதல் விண்ணப்ப விநியோகம் தொடங்கி உள்ளது. வரும 31ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்

https://gct.ac.in, www.gct.ac.in மற்றும்  https://www.tn-mbamca.com,  “www.tn-mbamca.com என்ற இணையதளங்கள் வாயிலாக மாணாக்கர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், சான்றிதழ் பதிவேற்றம், சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட மாணவர் சேர்க்கைக்குரிய அனைத்து பணிகளும் ஆன்லைன் மூலம் மட்டுமே நடைபெறும் என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.