டெல்லி: நாட்டின் மொத்த கடன் சுமை 119 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக நாடாளுமன்ற மக்களவையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார்.

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் பெகாசஸ் அமளிகளுக்கு இடையிலும் நடைபெற்று வருகிறது. நிதிதுறை தொடர்பான விவாதத்தின்போது, மக்களவை உறுப்பினர் ஒருவர், நாட்டின் கடன் சுமை குறித்து கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு எழுத்து மூலம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்துள்ளார்.
அதில், 2020- 21ம் நிதியாண்டில் நாட்டின் மொத்த கடன் சுமை 119.54 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
கடன் சுமையை குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், நிதி பற்றாக்குறையை தற்போதுள்ள 6 புள்ளி 8 சதவீதத்திலிருந்து, 2025 – 26ம் நிதி ஆண்டில் 4 புள்ளி 5 சதவீதமாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வரி வசூலை அதிகரிப்பது மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்கள், நிலங்களை விற்பனை செய்வது ஆகியவற்றின் வாயிலாக கடன்களை குறைக்க முயற்சி நடைபெற்று வருகிறது.
மற்றொரு கேள்விக்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், கடந்த 2015ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட தங்க பத்திர விற்பனை மூலம், இதுவரை 31 ஆயிரத்து 290 கோடி ரூபாய் திரட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]