டில்லி

ந்தியாவில் நேற்று 27,421 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,19,97,017 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27,421 அதிகரித்து மொத்தம் 3,19,97,017 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 376 அதிகரித்து மொத்தம் 4,28,715 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 41,457 பேர் குணமாகி  இதுவரை 3,11,31,922 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 3,82,292 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 4,505 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 63,57,833 ஆகி உள்ளது  நேற்று 68 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,34,064 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 7,568 பேர் குணமடைந்து மொத்தம் 61,51,956 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 68,375 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 13,049 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 35,65,574 ஆகி உள்ளது.  இதில் நேற்று 105 பேர் உயிர் இழந்து மொத்தம் 17,852 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 20,004 பேர் குணமடைந்து மொத்தம் 33,77,691 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,69,512 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 1,186 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 29,19,711 ஆகி உள்ளது  இதில் நேற்று 24 பேர் உயிர் இழந்து மொத்தம் 36,817 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,776 பேர் குணமடைந்து மொத்தம் 28,59,552 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 23,316 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,929 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 25,77,237 ஆகி உள்ளது  இதில் நேற்று 24 பேர் உயிர் இழந்து மொத்தம் 34,340 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,886 பேர் குணமடைந்து மொத்தம் 25,22,470 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 20,427 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 1,413 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 19,83,721 ஆகி உள்ளது.  நேற்று 18 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 13,549 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,795 பேர் குணமடைந்து மொத்தம் 19,50,693 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 19,549 பேர் சிகிச்சையில் உள்ளனர்.