கோவை

கொரோனா மூன்றாம் அலையால் கோவையில் அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக மாவட்ட கொரோனா தடுப்பு சிறப்பு அலுவலர் எச்சரித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும் கோவை மாவட்டத்தில் தினசரி பாதிப்பு அதிக அளவில் உள்ளது.  இன்று கோவையில் 235 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  தமிழகத்தில் இது மிகவும் அதிகமானதாகும்.  இதுவரை 2.31 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு 2,194 பேர் உயிரிழந்து 2.27 லட்சம் பேர் குணம் அடைந்து தற்போது 2,228 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இதையொட்டி கோவை மாவட்டத்தில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.  அதில் ஒரு பகுதியாக, கொரோனா பரவல் தடுப்புப் பணிகள் குறித்து ஊராட்சி தலைவர்களுடனும், அரசு அலுவலர்களுடனும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பினருடனும், வணிக சங்க பிரதிநிதிகளுடனும் ஆலோசனை கூட்டம் இன்று (ஆக 9) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அடுத்தடுத்து நடந்தது.

அப்போது கோவை மாவட்ட கொரொனா தடுப்பு சிறப்பு அலுவலர் எம் ஏ சித்திக், இன்று, கோவை: மாவட்டத்தில் கொரோனா பரவல் தடுப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கோவையில் சராசரியாக 200 பேர் புதியதாக கரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இங்கு சமீபத்தில் கரோனா எதிர்ப்பு சக்தி குறித்து மாவட்ட வாரியாக ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த ஆய்வின் படி கோவையில் மக்களுக்கு கரோனா எதிர்ப்புச் சக்தி 43 சதவீதமாக உள்ளது. சென்னையில் கொரோனா எதிர்ப்புச் சக்தி 78 சதவீதமாக உள்ளது. கொரோனா எதிர்ப்புச் சக்தி 43 சதவீதமாக இருப்பதால், கோவையில் 3-வது அலையால் அதிகளவு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள மருத்துவத்துறையினர் மட்டுமல்ல, மக்களும் தயாராக இருக்க வேண்டும். மூன்றாம் அலை அடுத்த ஒரு மாதத்துக்குள் வர வாய்ப்புள்ளது.

மக்கள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், கிருமிநாசினிகளைக் கொண்டு கைகளை கழுவுதல் போன்ற நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாகப் பின்பற்ற வேண்டும். கோவையில் கோவையில் கொரோனா எதிர்ப்புச் சக்தி 43 சதவீதமாக இருக்கும் நிலையில், இதை அதிகரிக்கத் தடுப்பூசி மட்டுமே வழியாகும்.” எனத் தெரிவித்துள்ளார்.