சிவகார்த்திகேயன் கைவசம் டாக்டர், அயலான், டான் போன்ற படங்கள் உள்ளன.

இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தை அறிமுக இயக்குனர் அசோக் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர் இயக்குனர் அட்லியிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.

இப்படத்துக்கு டி.இமான் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த மனம் கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், சீமராஜா, நம்ம வீட்டு பிள்ளை ஆகிய படங்களுக்கு டி.இமான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

[youtube-feed feed=1]