டெல்லி: அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள கோவா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சட்டமன்றதேர்தல் பார்வையாளராக முன்னாள் மத்தியஅமைச்சர் ப.சிதம்பரம் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
அடுத்த ஆண்டு (2020)  உத்தரபிரதேசம், மணிப்பூர், கோவா, பஞ்சாப், உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களில் அரசின் ஆட்சிக்காலம் முடிவுக்கு வருகிறது. இதனால் இந்த ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையமும் தயாராகி வருகிறது. மாநில கட்சிகளும் ஆட்சியைகைப்பற்ற வியூகங்கள் வகுத்து செயல்படத் தொடங்கி உள்ளன.
இந்த நிலையில்,  கோவா சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, கோவா மாநில காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பார்வையாளராக மூத்த காங்கிரஸ் உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரத்தை அகில இந்திய காங்கிரஸ் தலைமை நியமித்து உள்ளது. கோவா மாநில காங்கிரஸ் கட்சியின்  செயல்பாடுகள், ஒருங்கிணைப்பு மற்றும் பணிகளை கவனிக்க சிதம்பரத்துக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதற்கான உத்தரவு அகில இந்தியகாங்கிரஸ் கட்சி தலைமை ஒப்புதலுமன் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.