சென்னை: தமிழகஅரசு இன்று வெளியிட்டுள்ள நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி – தினசரி இழப்பு எவ்வளவு?  என்ற விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை தலைமைச்செயலகத்தில் இன்று காலை 11.30 மணியளவில் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் வெள்ளை அறிக்கை வெளியிட்டார். 120 பக்கங்களை கொண்ட இந்த வெள்ளை அறிக்கையில், மாநிலத்தின் கடன் விவரங்கள், மின்சார வாரியம், போக்குவரத்து, மருத்துவம், உள்ளாட்சித் துறை சார்ந்த அரசு நிறுவனங்களின் வரவு செலவு திட்டம்  மட்டும்,  கடந்த அதிமுக அரசு எப்படி வருவாய் இலக்கை அடைய தவறியது என்பது குறித்த காரணங்களும் அதில் இடம்பெற்றுள்ளது.

மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி காட்சி:

தமிழ்நாட்டின் உண்மையான வளர்ச்சி சராசரியாக 10.15% ஆக இருந்தது.

இது கடந்த  2006-07 முதல் 2010 வரையிலும், மற்றும் 2011-12 முதல் 2015-16 வரை 11,6.70% ஆக உயர்ந்திருந்தது.

பின்னர்,  2016-17 முதல் 2019-20 வரையிலான அதிமுக ஆட்சியில்  7.22 % ஆக குறைந்ததுடன்,

2006-11 ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது, அகில இந்திய சராசரியை விட தமிழகத்தின் வளர்ச்சி கணிசமாக உயர்ந்தது.

பின்னர்,   2011-12 முதல் 2015-16 வரையிலான அதிமுக ஆட்சியின்போது மீண்டும் கணிசமாகக் குறைந்தது.

தினசரி இழப்பு, வட்டி மற்றும் கடன் மற்றும் தனிநபர் விளைவுகள்:

தமிழ்நாட்டின் போக்குவரத்து கழகங்களில் தினசரி செயல்பாட்டு இழப்பு: – 15 கோடி

தமிழ்நாடு மின்சாரத் துறையில் தினசரி இயக்க இழப்பு: – 55 கோடி

தமிழ்நாட்டின் தெரியும் கடனுக்கான தினசரி வட்டி செலுத்துதல்: – 115 கோடி

பொதுத்துறை நிறுவனம் மற்றும் பிற கடமைகள் உட்பட தினசரி வட்டி செலுத்துதல்: – 180 கோடி

ஒவ்வொரு குடிமகனுக்கும் (2021) வருடாந்திர வட்டி செலுத்துதல் (PSU கள் உட்பட): – ரூ. 7,700

தமிழ்நாடு குடிமகனுக்குத் தெரியும் கடன் (2021): – ரூ. 70,000

ஒரு குடிமகனுக்கு அனைத்து கடன்களும் (பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் கண்ணுக்கு தெரியாதவை): ரூ. 1,10,000

இவ்வாறு, மு.க.ஸ்டாலின் தலைமையிலான  திமுக அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வெள்ளை அறிக்கை குறித்த முழு தகவலை பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்…

http://www.tnbudget.tn.gov.in/index.html