சென்னை: திமுக ஆட்சியில் நிதிநிலை சீர்கேடு என்பது தவறான தகவல் என்று மறுத்த முன்னாள் முதல்வரும், அதிமுக துணை ஒருங்கிணைப்பளருமான எடப்பாடி பழனிச்சாமி கூறினார். மேலும், முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பாஜகவில் சேரமாட்டார் என்றும் கூறினார்.
திமுக அரசு இன்று கடந்த அதிமுக ஆட்சியின் 10ஆண்டு கால நிதிநிலை குறித்து வெள்ளையை அறிக்கை வெளியிடுகிறது. மேலும், அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திடீரென டெல்லி சென்றுள்ளார். இதனால், அவர் பாஜகவில் சேர உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.
இந்த நிலையில், முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்கட்சித் தலைவருமான டப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,.
அதிமுக ஆட்சியில் தமிழக நிதிநிலை சீரழிந்ததாக கூறப்படுவது தவறானது.2011ல் அதிமுக ஆட்சி பொறுப்பு ஏற்கும்போதும் கடன்சுமை இருந்தது. அதிமுக ஆட்சியில் வாங்கிய கடன்கள் தற்போது மூலதனங்களாக உள்ளது.
அதிமுக ஆட்சியில் வாங்கிய கடன்கள் பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. மின்சாதன பொருட்களின் விலை உயர்ந்தபோதும், மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டினார்.
ஏற்கனவே கடந்த அதிமுக ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்களை தற்போது திமுக அரசு துவக்கி வைக்கிறது என்றவர், நாங்கள் போடப்பட்ட திட்டங்களுக்கு தற்போது அடிக்கல் நாட்டுகிறார்கள் என்று கூறியவர், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு புதிதாக என்ன திட்டங்களை துவக்கியுள்ளனர்? திமுக ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் மக்களின் குறைகள் தீர்க்கப்படும் என்று கூறியது என்ன ஆனது?, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5 குறைக்கப்படும் என்கிற திமுகவின் வாக்குறுதி என்ன ஆனது?, டீசல் விலை லிட்டருக்கு ரூ.4 குறைக்கப்படும் என்கிற திமுகவின் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என வினவியதுடன், திமுக அரசு பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு தான் அவர்களின் செயல்பாடுகளை மதிப்பிட முடியும் என்றார்.
அப்போது செய்தியளார்கள் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பாஜகவில் இணைந்துவிட்டாரா என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்தவர்,. கேடி ராஜேந்திரபாலாஜி பாஜகவில் இணையவில்லை என்று கூறினார்.
பெகாசஸ் டெலிபோன் ஒட்டுக்கேட்பு குறித்த கேள்விக்கு, பெகாசஸ் விவகாரத்தில் உண்மை நிலை குறித்து தெரியாமல் கருத்து தெரிவிக்க முடியாது என்றார்.
தமிழ்நாட்டில் கடந்த 2001 – 2002 ஆம் நிதியாண்டில் அப்போதைய நிதியமைச்சர் பொன்னையன், அதற்கு முந்தைய 5 ஆண்டு திமுக ஆட்சியில் நடைபெற்ற வரவு செலவு தொடர்பான வெள்ளை அறிக்கையை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.