புதுடெல்லி:
காவல் நிலையங்களில் மனித உரிமை மீறல்களும், உடல் ரீதியான துன்புறுத்தல்களும் அதிகரித்துள்ளதாக – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா வேதனை தெரிவித்துள்ளார்.

தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தில் செயலி அறிமுகம் விழாவில் பேசிய அவர், கடும் சட்ட விதிமுறைகள் இருந்த போதிலும், காவல்துறை காவல் மரணங்களும், சித்திரவதைகளும் சமூகத்தில் தொடர்கதையாக இருந்து வருகிறது. இதில் வசதி படைத்தவர்களும் விதிவிலக்கல்ல என்று தெரிவித்துள்ளார்.
இவற்றைத் தடுக்க காவல் நிலையங்களில் சட்ட விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு விளம்பரங்கள் இடம் பெறுவது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Patrikai.com official YouTube Channel