சென்னை:
நடிகை மீரா மிதுன் மீது, சென்னை சைபர் கிரைம் காவல்துறை 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்துள்ளது.

நடிகை மீரா மிதுன் எப்போதும் தன்னை சுற்றி சர்ச்சைகள் இருக்கும் விதமாகப் பேசிவருகிறார். நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யாவை மிகவும் தரக்குறைவாகப் பேசி விமர்சனம் செய்து வந்தார் நடிகையும் மாடலுமான மீரா மிதுன். இதற்கு எதிர்வினை ஆற்றும் சம்மந்தப்பட்ட நடிகர்களின் ரசிகர்களும் ஆபாசத்தை வாரி உமிழ்ந்தனர். இதனால் சில நாட்கள் அவர் சமூகவலைத்தளங்களில் இவர் பேசுபொருளாக இருந்தார்.
இந்நிலையில் சில மாதங்கள் அமைதியாக இருந்த அவர் இப்போது தமிழ் திரைத்துறையில் இருக்கும் பட்டியலினக் கலைஞர்களை தவறாக பேசி ஒரு காணொளி வெளியிட்டுள்ளார். இதற்குப் பலரும் இணையத்தில் கண்டனங்களைத் தெரிவித்து மீரா மிதுனைக் கைது செய்யவேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.
மேலும் அவரை கைது செய்யக்கோரி மதுரை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் திராவிடர் விடுதலை கழகத்தினர் உள்ளிட்ட பல அமைப்புகள் புகார் அளித்துள்ளனர். மீரா மிதுன் நண்பர் ஷாம் அபிஷேக் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து கைது செய்யப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பட்டியல் இனத்தினர் குறித்து நடிகை மீரா மிதுன் அவதூறாகப் பேசியதற்காக. சென்னை சைபர் கிரைம் காவல்துறை 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்துள்ளது.
Patrikai.com official YouTube Channel