டில்லி
இந்தியாவில் நேற்று 39,061 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,19,33,553 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 39,061 அதிகரித்து மொத்தம் 3,19,33,553 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 491 அதிகரித்து மொத்தம் 4,27,892 பேர் உயிர் இழந்துள்ளனர். நேற்று 42,928 பேர் குணமாகி இதுவரை 3,10,92,087 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 4,00,945 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் நேற்று 6,061 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 63,47,820 ஆகி உள்ளது நேற்று 128 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,33,845 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 9,356 பேர் குணமடைந்து மொத்தம் 61,39,492 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 71,050 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கேரள மாநிலத்தில் நேற்று 20,367 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 35,33,918 ஆகி உள்ளது. இதில் நேற்று 139 பேர் உயிர் இழந்து மொத்தம் 17,654 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 20,0265 பேர் குணமடைந்து மொத்தம் 32,37,579 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,78,166 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று 1,610 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 29,16,927 ஆகி உள்ளது இதில் நேற்று 32 பேர் உயிர் இழந்து மொத்தம் 36,773 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,640 பேர் குணமடைந்து மொத்தம் 28,55,862 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 24,155 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 1,969 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 25,73,352 ஆகி உள்ளது இதில் நேற்று 29 பேர் உயிர் இழந்து மொத்தம் 34,289 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,839 பேர் குணமடைந்து மொத்தம் 25,18,777 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 20,286 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 1,908 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 19,80,258 ஆகி உள்ளது. நேற்று 23 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 13,513 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 2,103 பேர் குணமடைந்து மொத்தம் 19,46,370 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 20,375 பேர் சிகிச்சையில் உள்ளனர்.