டோக்கியோ:
டோக்கியோ ஒலிம்பிக்ஸ் மல்யுத்த போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர் பஜ்ரங் புனியா வெண்கலம் வென்றார்.

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஆடவர் 65 கிலோ பிரிவில் கசகஸ்தான் வீரருடன் மோதிய இந்திய வீரர் பஜ்ரங் புனியா, 8- 0 என்ற புள்ளிக் கணக்கில் கஜகஸ்தான் வீரரை வீழ்த்தி வெண்கலம்  வென்றார்.

இதையடுத்து இந்திய வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. இந்திய இரண்டு வெள்ளி, நான்கு வெண்கல பதக்கங்களை வென்று, பதக்கப்பட்டியலில் 66-ஆவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.