சென்னை:
ஆக.9ல் தமிழ்நாடு அரசின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்பட உள்ளது.
2021-22ஆம் நிதியாண்டுக்கான முழுமையான நிதிநிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தயாரித்து வருகிறார்.
இந்த ஆண்டு, பரிட்சார்த்தமாக காகிதமில்லா இ-பட்ஜெட்டைத் தாக்கல் செய்யும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. இதுதவிர, இந்த ஆண்டு தமிழக வரலாற்றில் முதல் முறையாக வேளாண்மைத் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை ஆகஸ்ட் 9-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. வரும் 9ம் தேதி காலை 11:30 மணிக்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் உயரதிகாரிகள் வெளியிடுகின்றனர்.
இதையடுத்து, வரும் 13-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் 2021-2022ஆம் ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவிருக்கிறது. நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் தாக்கல் செய்கிறார். முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான முதல் நிதி நிலை அறிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது.