சென்னை:
10, 11-ஆம் வகுப்பு துணைத்தேர்வு தொடங்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்வுகளில் தோல்வியடைந்தவர்கள் மற்றும் தனித்தேர்வு எழுத்துபவர்களுக்கான தேர்வுகள் செப்டம்பர்
16 முதல் துவங்கி, 30ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதில் 10ஆம் வகுப்பு துணை தேர்வு செப்டம்பர் மாதம் 16 முதல் 28-ஆம் தேதி வரையும், 11-ஆம் வகுப்பு தேர்வுகள் செப்டம்பர் மாதம் 15 முதல் 30 வரையும் நடத்தப்படும். இந்த துணைத்தேர்வு எழுதுபவர்கள், ஆகஸ்ட் 7 முதல் 11ஆம் தேதி வரை சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel