சென்னை: தமிழகத்தில் நேற்று 1,997 பேர் புதிதாக கொரோனா வைரசால்  பாதிக்கப்பட்டுள்ளனர். தலைநகர் சென்னையில் 196 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக சுகாதாரத்துறையின் தகவலின்படி, நேற்று ஒரே நாளில் புதியதாக  1,997 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த  எண்ணிக்கை 25,69,398 பேர் ஆக அதிகரித்துள்ளது. அதுபோல கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில்,  சிகிச்சை பலனின்றி நேற்று மட்டும் 33 பேர்உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,230 ஆக அதிகரித்துள்ளது. அதே வேளைய்ல நேற்று  மட்டும் கொரோனாவிலிருந்து 1,943 பேர் குணமடைந்த நிலையில், இதுவரையில் 25,15,030 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது கொரோனா வார்டில் 20,138 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் நேற்று 196 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, மொத்த பதிப்பு  5,39,105 ஆக உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக உயிரிழப்பு ஒன்று அல்லது ஏதும் இல்லாத நிலையில்  நேற்று 4 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதன்மூலம் சென்னையில் மட்டும் இதுவரை  8,327 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 146 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதன்மூலம் இதுவரை  மொத்தம் 5,28,891 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது சென்னையில் 1,887 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மண்டலம் வாரியாக பாதிப்பு: