சென்னை: எம்சிஏ, எம்.பி.ஏ படிப்பு ஆகஸ்டு 11ந்தேதி முதன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அறிவித்து உள்ளது.

தமிழ்நாட்டில் இளங்கலை ஆர்ட்ஸ் மற்றும் பொறியியல், மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், முதுகலைப் படிப்பான எம்பிஏ மற்றும் எம்சிஏ படிக்க  விரும்பும் மாணவர்கள் ஆகஸ்டு 11 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிட்டப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,  இளங்கலை படிப்பில் தேர்ச்சி பெற்ற தகுதிவாய்ந்த மாணவர்கள் அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம், இதர பல்கலைக்கழகங்கள், சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் மற்றும் கல்லூரி கல்வி இயக்கத்தின் அனுமதியுடன் செயல்படும் எம்பிஏ, எம்சிஏ முதுகலை பட்டப் படிப்பு சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் ஆக. 11 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.gct.ac.in மற்றும் www.tn-mbamca.com என்ற இணையதளம் மூலம் தேவையான சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம்.

பதிவுக் கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்தக் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்குரிய அனைத்து பணிகளும் ஆன்லைன் மூலம் மட்டுமே நடைபெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.