சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு (2020) சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பஞ்சாப் முதல்வரின் ஆலோசகராக செயல்பட்டு வந்த பிரசாந்த் கிஷோர் அந்த பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரசியல் சாணக்கியன் என்று பெயர்பெற்றவர் பிரசாந்த் கிஷோர். கடந்த 2015ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் ஐக்கிய ஜனதா தளத் தலைவர் நிதிஷ் குமார் தலைமையில் ஆட்சி அமைய பெரிதும் உதவியவர். பின்னர் டெல்லி, ஆந்திரா, மேற்குவங்கம் உள்பட பல்வேறு மாநில கட்சிகளின் வெற்றிக்கு அச்சாரமிட்டதுடன், தமிழ்நாட்டிலும் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைய பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில், பஞ்சாப் மாநில முதல்வர் அம்ரிந்தர் சிங், பிரசாந் கிஷோரை தனது அரசியல் ஆலோசகராக நியமனம் செய்தார். இதையொட்டி கடந்த மார்ச் மாதம் அரசியல் நிபுணர் பிரசாந்த் கிஷோருடன் ஒப்பந்தம் போடப்பட்டது.
பஞ்சாபில் தற்போது கேப்டன் அம்ரிந்தர் சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற முதல்வர் அமரிந்தர் சிங் வியூகம் வகுத்து வருகிறார். அதற்கான வேலைகளில் பிரசாந்த் கிஷோரும் ஈடுபட்டு வந்தார்.
மேலும் 2024 நாடாளுமன்ற தேர்தலில், பாஜகவை தோற்றடிகக்கவும் வியூகம் வகுத்து வருகிறார். அது தொடர்பாக ராகுல்காந்தி, பிரியங்கா வதேரா, மம்தா, சரத்பவார் உள்பட உள்பட எதிர்க்கட்சித்தலைவர்களை சந்தித்து பேசி ஒருங்கிணைத்து வந்தார். இந்த நிலையில், தற்போது திடீரென பஞ்சாப் காங்கிரஸ் கட்சிக்கு உதவுவதில் இருந்து பின்வாங்கி இருப்பதுடன், தனது ஆலோசகர் பதவியையும் ராஜினமா செய்வதாக அறிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக பஞ்சாப் முதல்வருக்கு அனுப்பியுள்ள ராஜினாமா கடிதத்தில், பொது வாழ்க்கையில் இருந்து தற்காலிக ஓய்வு எடுக்க முடிவு செய்துள்ளேன். இதன் காரணமாக பஞ்சாப் முதல்வரின் முதன்மை ஆலோசகர் பதவியை என்னால் வகிக்க இயலாது. எனது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இன்னும் எந்தவொரு முடிவும் எடுக்கவில்லை. ஆகவே, என்னை முதன்மை ஆலோசகர் பதவியில் இருந்து என்னை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
மேலும், . என்னை இந்த பதவியில் அமர்த்தியதற்கு நன்றி சொல்ல நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன், அதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசல் அதிகரித்துள்ளது. அங்கு மாநில காங்கிரஸ் தலைவராக சித்துவை அகில இந்திய தலைமை நியமித்து உள்ளது. இதனால் கேப்டன் அம்ரிந்தர்சிங் கடும் கோபத்தில் உள்ளதார். அங்கு கட்சிக்குள் நடைபெற்ற உட்கட்சி பூசல் காரணமாகவே,இ பிரசாந்த் கிஷோர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், பிரசாந்த் கிஷோருக்கு, அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் தேசிய அளவில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட இருப்பதாகவும், அதனால்தான் அவர் தனது பதவியை ராஜினாமா செய்து இருப்பதாகவும் மற்றொரு தகவல் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பான எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகாத நிலையில், பிரசாந்த் கிஷோர் பஞ்சாப் காங்கிரசை விட்டு விலகியிருப்பது, பேரிழிப்பதாக கருதப்படுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.