கொச்சி
இந்தியாவில் தயாரான முதல் விமானம் தாங்கி கப்பலான விக்ராந்த் தனது பயணத்தைத் தொடங்கி உள்ளது.
முதல் முரையாக இந்திய கடற்படைக்காக விமானம் தாங்கி போர்க்கப்பலான விகாராந்த், கொச்சின் கப்பல் கட்டும் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டது. இது 262 மீட்டர் நீளம், 62 மீட்டர் அகலம், 25.6 மீட்டர் உயரம் கொண்டதாகும். மேலும் இது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் போர்க் கப்பல் என்ற சிறப்பம்சம் பெற்றுள்ளது.
இந்த கப்பலின் வடிவமைப்பு பணிகள் 1999-ல் தொடங்கி 2009-ல் கப்பலின் அடித்தளம் அமைக்கப்பட்டது.பிறகு படிப்படியாக பணிகள் நிறைவடைந்து 2020 டிசம்பரில் அடிப்படை சோதனைகள் முடிவடைந்தன. இன்று (ஆக., 04) தனது முதல் சோதனை ஓட்டத்தை அரபிக் கடலில் விக்ராந்த் துவங்கியது. இந்த பிரம்மாண்ட கப்பலின் சோதனைப் பயணம் நான்கு நாட்கள் நடைபெறும்.
இந்த சோதனை ஓட்டம் குறித்த வீடியோவை டிவிட்டரில் பகிர்ந்துள்ள கடற்படை செய்தித் தொடர்பாளர், “இந்த கப்பலின் முன்னோடி விக்ராந்த், 1971 போர் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய 50-ம் ஆண்டில், அதன் மறுபிறப்பான இன்றைய விக்ராந்த் தனது முதல் சோதனை கடல் பயணத்தை இன்று தொடங்கியிருக்கிறது.இது
இது இந்தியாவிற்குப் பெருமை மிகுந்த மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் ஆகும். விக்ராந்த் இதுவரை இல்லாத வகையில் இந்தியாவில் கட்டப்பட்ட மிகப்பெரிய மற்றும் மிகவும் சிக்கலான போர்க்கப்பல் ஆகும்.” என குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்துப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “உள்நாட்டு விமானம் தாங்கிக் கப்பல் விக்ராந்தின் முதல் கடல் பயணம், பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு இந்தியா திட்டம் மீதான அசைக்க முடியாத அர்ப்பணிப்பின் உண்மையான சாட்சி. கோட்டைக் கூட பொருட்படுத்தாத அனைத்து பங்குதாரர்களின் உண்மையான ஈடுபாட்டை இவ்வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனை காட்டுகிறது. இந்தியாவுக்கு ஒரு பெருமையான தருணம்.” எனக் கூறியுள்ளார்.