டோக்கியோ: ஜப்பானில் நடைபெற்று வரும் டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இன்று நடைபெற்ற அரையிறதி போட்டியில் வெற்றிபெற்ற இந்திய வீரர் ரவி குமார் தாஹியா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதனால், இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் இந்திய வீரர்கள் தங்களது திறமைகளை நிரூபித்து அடுத்தச்சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனை வெற்றிபெற்று வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளார்.
இன்று காலை நடைபெற்ற 57 கிலோ மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் ரவி தாகியா கொலம்பிய வீரர் டைகரஸ் அர்பேனோவை 13-2 என்று வீழ்த்தி காலிறுதிக்குத் தகுதி பெற்றார், தொடர்ந்து, ரவிக்குமார் பல்கேரிய கிராப்லரை எளிதாக வீழ்த்தினார். 14-4 என்ற கணக்கில் வீழ்த்தி, அரையிறுத்திப்போட்டிக்குள் நுழைந்தார்.
பின்னர் இன்று மதியம் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில், கஜகஸ்தான் வீரர் நூர் இஸ்லாம் சனயேவை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறி, இறுதிப்போட்டிக்குள் நுழைந்து, இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.
இறுதிப்போட்டியில் ஈரான் அல்லது ரஷ்ய வீரர்களுடன் விளையாட வாய்ப்பு உள்ளது.