சென்னை: முந்தைய 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியின் நிதிநிலை குறித்து, 120பக்க வெள்ளை அறிக்கையை வரும் 9ந்தேதி தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிடுகிறார்.

தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்டு 13ந்தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில், இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 13-ஆம் தேதி சட்டப்பேரவையில் 2021-2022ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை  நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்ய இருக்கிறார்.

முன்னதாக, கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில்  தமிழக அரசின் நிதிநிலை குறித்து 120 பக்க வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்வெளியிடுகிறார். ஆகஸ்டு 9ந்தேதி இந்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என தெரிவித்து உள்ளார்.

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், “கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு அரசின் நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கை ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியிடப்படும். 120 பக்கங்கள் கொண்ட அறிக்கையில் கடன் விபரங்கள், சென்னை மெட்ரோ வாட்டர், மின்சார வாரியம், போக்குவரத்து, உள்ளாட்சி, வருவாய் இழப்பிற்கான காரணம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இருக்கும் என கூறினார்.