சென்னை:
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மெரினா உள்ளிட்ட கடற்கரைக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாகக் கடற்கரைக்குச் செல்ல அனுமதியில்லை என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், சென்னையில் மக்கள் அதிகம் கூடும் 9 இடங்களில் வணிக பகுதிகள் செயல்படத் தடைவிதிக்கப்பட்டுள்ளது என்றும், அத்தியாவசிய தேவை இருந்தால் மட்டும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும். திருமண நிகழ்ச்சிகளில் சாப்பிடும் போதும் தனிமனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். விஷேச நாட்களில் மக்கள் தங்கள் வீடுகளிலேயே வழிபாடு நடத்திக் கொள்ள வேண்டும்” என்று பொதுமக்களை அறிவுறுத்தினார்.
Patrikai.com official YouTube Channel