தானே

நியாயவிலைக்கடை வர்த்தகர்களை ஜி எஸ் டி வரி செலுத்த வேண்டாம் என பிரதமர் மோடியின் சகோதரர் கேட்டுக் கொண்டுள்ளார்.

பிரதமர் மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி ஆவார்.   இவர் அகில இந்திய நியாயவிலைக்கடை விநியோகிப்பாளர்கள் சங்கத்தில் துணைத்தலைவராகப் பதவி வகித்து வ்ருகிறார்.    நேற்று முன் தினம் பிரகலாத் மோடி மகாராஷ்டிரா மாநிலம் சென்றுள்ளார்.  அங்குள்ள நியாயவிலைக்கடைகள் விநியோகிப்பாளர்களை அவர் சந்தித்துள்ளார்.

அப்போ து அவர்கள் தங்கள் குறைகளை பிரகலாத் மோடியிடம் தெரிவித்துள்ளனர்.  அதைக் கேட்ட பிரகலாத் மோடி அந்த வர்த்தகர்களிடம் பேசுகையில், “நீங்கள் உங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களை நடத்துங்கள்.  இந்த போராட்டங்களை மத்திய மற்றும் மாநில அரசுகள் பதில் அளிக்கும் வரை தொடர்ந்து நடத்துங்கள்.

உங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை யாரும் ஜி எஸ் டி வரி செலுத்த வேண்டாம்.  இதை பார்த்து  பிரதமர் மோடியும்  முதல்வர் தாக்கரேவும் உங்கள் வீட்டு வாசலுக்கே வர வேண்டும்.  அப்படி ஒரு தீவிரமான போராட்டத்தை நடத்துங்கள்.   இந்த நாட்டில் உள்ள 6.5 லட்சம் நியாயவிலைக்கடைகளுக்கு பிரதிநிதியாக இங்கு அடக்குமுறை செல்லாது என தெரிவிக்கிறேன்” எனக் கூறி உள்ளார்.