பஞ்சாப்:
பஞ்சாப் மாநிலத்தில் அனைத்து பள்ளிகளைத் திறக்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
பஞ்சாப்பில் இந்த மாத தொடக்கத்திலிருந்து கொரோனா பரவல் மெல்ல மெல்லக் குறைந்து வருகிறது. கொரோனா குறைந்ததையடுத்து மாநிலத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளைத் திறப்பதற்கான நடவடிக்கைகளை அரசு தீவிரமாக மேற்கொண்டு வந்தது.
கொரோனா குறைந்ததையடுத்து கடந்த ஜூலை 20ஆம் தேதி பஞ்சாப் மாநில அரசு வெளியிட்ட அறிக்கையில், ஜூலை 26ஆம் தேதி முதல் திறக்க அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து பள்ளிகள் திறக்கப்படும் 10 முதல் 12ஆம் வரை மாணவர்களுக்கான வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வரும் திங்கட்கிழமை முதல் அனைத்து வகுப்புகளும் பள்ளிகளைத் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.