திருப்புவனம்: கடந்த அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் ரூ.33 ஆயிரம் கோடி நஷ்டத்தில் இயங்கி வந்ததாக தமிழ்நாடு போக்குவரத்து துறை! அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்து உள்ளார்.
திருப்புவனத்தில் புதிய வழித்தடங்களில் பேருந்துகளைத் தொடங்கி வைத்து பேசிய அமைச்சர், தமிழ்நாட்டிற்கு,. திறமையான முதல்வராக மு.க.ஸ்டாலின் கிடைத்துள்ளார். இனிவரும் காலங்களில் தமிழகத்தில் எதிர்க்கட்சிகளே இல்லாத அளவுக்கு அவரது செயல்பாடு சிறப்பாக உள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 2 மாதங்களில் கூடுதலாக 3,000 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. இன்னு 3,000 பேருந்துகளைய இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசு அறிவித்துள்ள பெண்களுக்குப் பேருந்தில் இலவசக் கட்டணத்தால் அரசுக்கு ரூ.1,358 கோடி செலவு ஏற்படுகிறது. இருந்தாலும், போக்குவரத்துத்துறை சிறப்பாக வழிநடத்தி வருகிறோம். கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் ரூ.33 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதிமுக அரசு 5.76 லட்சம் கோடி கடன் வைத்துவிட்டுச் சென்றுள்ளனர். தற்போது அதற்கு வட்டி கட்டும் நிலை உள்ளது.
இவ்வாறு அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார்.