சென்னை: சென்னையில் இன்று 3 புறநகர் மின்சார ரயில்கள் சேவை ரத்து செய்யப்படுவதாக  தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் அறிவித்து உள்ளது. பராமரிப்பு பணி காரணமாக இந்த ரயில் சேவைகள் இன்று ஒரு நாள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகதெரிவித்து உள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  சென்னை சென்ட்ரல் – அரக்கோணம்தடத்தில் வில்லிவாக்கம் மற்றும் வியாசர்பாடி ஜிவா ரயில் நிலையங்களுக்கு இடையே இன்று காலை 11.05 மணி முதல் மதியம் 1.05 மணி வரையில் தண்டவாள பராமரிப்பு பணி நடக்கவுள்ளது.

இதனால், வேளச்சேரி – ஆவடிஇடையே இன்று காலை 10.15,

ஆவடி -சென்னை சென்ட்ரல் இடையே காலை11 மணி,

ஆவடி – வேளச்சேரி இடையே மதியம் 12.10 மணிக்கு செல்லும் மின்சாரரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

இதேபோல் சென்னை சென்ட்ரலில் இருந்து கடம்பத்தூருக்கு மதியம் 12.10மணிக்கு புறப்பட்டு செல்லும் ரயில், ஆவடியில் இருந்து இயக்கப்படும்.

சென்னை சென்ட்ரலில் இருந்து பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்குக்கு மதியம் 12.20-க்குபுறப்பட்டு செல்லும் ரயிலும், திருவள்ளூருக்கு மதியம் 1 மணிக்கு புறப்பட்டு செல்லும் ரயிலும் இன்றைய தினம் சென்னை கடற்கரையில் இருந்து புறப்பட்டு செல்லும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.