சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 1,859 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இன்று மட்டும் 27 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், 2193 பேர் குணமடைந்துள்ளனர்.
தமிழ்நாடு சுகாதாரத்துறை இன்று இரவு 8.30 மணி அளவில் வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழகம் முழுவதும் இன்று 1,947 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 25,55,664 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 34,023 ஆக அதிகரித்துள்ளது.
இன்று கொரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 28 பேர் உயிரிழந்தனர். 7 பேர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவராவார். 21 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள். இன்று உயிரிழந்தவர்களில் முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன.
இன்று மேலும் 2,193 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 25,00,434 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது சிகிச்சையில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 21,207.
சென்னையில் இன்று 181 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையைத் தவிர 37 மாவட்டங்களில் 1,678 பேருக்குத் தொற்று உள்ளது.
இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 1,56,359. இதுவரை எடுக்கப்பட்ட மொத்தம் மாதிரிகளின் எண்ணிக்கை 3,62,56,593 ஆக உயர்ந்துள்ளது.
தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 14,93,142 பேர். பெண்கள் 10,62,484 பேர். மூன்றாம் பாலினத்தவர் 38 பேர்.
இன்று தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 1,053 பேர். பெண்கள் 806 பேர்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.