ராதிகாவின் வாணி ராணி தொடரில் நடித்து பிரபலமான வேணு அரவிந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

இவர் கே.பாலச்சந்தர் இயக்கிய காதல் பகடை, காசளவு நேசம், காதல் வாங்கி வந்தேன் ஆகிய தொடர்களில் நடித்துள்ளார்.

தற்போது இவர் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொரோனா தாக்குதலுக்குப் பின்பு நிமோனியா வந்ததாலும், மூளையில் கட்டி வந்து அதை அறுவை சிகிச்சை செய்து அகற்றியதாலும், கோமா நிலைக்கு சென்றதாக கூறப்பட்டது.

இந்நிலையில் சின்னத்திரை நடிகர் அருண் ராஜன் இதனை மறுத்துள்ளார். இது குறித்து இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டுள்ள அருண், ” நடிகர் வேணு அரவிந்த் கோமாவில் இல்லை என்றும் அவர் தற்போது நினைவுடன் தான் இருக்கிறார் என்றும், தனக்கு செய்யப்படும் சிகிச்சை குறித்து அவர் கேட்டறிந்து வருகிறார் என்றும் சிகிச்சைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கிறார்” எனவும் தெரிவித்துள்ளார்.

https://www.instagram.com/p/CR50xGOh7n7/