கவுகாத்தி: இரு மாநிலங்களுக்கு இடையே தொடரும் வன்முறை சம்பவங்கள் காரணமாக மிசோரம் மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என அசாம் அரசு  மாநில மக்களை அறிவுறுத்தி உள்ளது.

வடகிழக்கு மாநிலங்களான அசாமுக்கும், மிசோரத்துக்கும் இடையிலான பிரச்சினை பல ஆண்டுகளாக தொடர்ந்து, இந்த மாநிலங்களில் பிரிக்கப்பட்டதில் இருந்தே  எல்லைப் பிரச்சனை தொர்பாக அவ்வப்போது கலவரங்கள் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. அதுபோல, கடந்த 26ந்தேதியன்று , பழைய எல்லைப் பிரச்சனை தொடர்பாக, இரு மாநில மக்களிடையே கலவரம் மூண்டும்.  அசாம் மற்றும் மிசோராம் மாநில எல்லையில் நடைபெற்ற கலவரத்தில் குறைந்தது 6 அசாம் காவல்துறையினர் உயிரிழந்துள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து,   மிசோரம் மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என சொந்த மாநில மக்களுக்கு அசாம் அரசு அறிவுறுத்தி உள்ளது.

இதுதொடர்பாக அசாம்  மாநில உள்துறை   வெளியிட்ட செய்திக்குறிப்பில், அசாம் – மிசோரம் மாநில எல்லைப் பகுதியான பல்வேறு வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக அசாம் மாநிலத்தின் காச்சர், கரிம்ஜங், ஹைலகண்டி ஆகிய மாவட்டங்களில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன.

மாநில மக்களின் சொந்த பாதுகாப்பிற்கு அண்டை மாநிலத்தால் எழும் அச்சுறுத்தல்களை ஏற்றுக்கொள்ள முடியாது. பணி மற்றும் இதர நிமித்தங்களுக்காக மிசோரம் மாநிலத்தில் வசித்துவரும் அசாம் மக்கள் தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளவும், மக்கள் மிசோரம் பயணம் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.