சென்னை: தமிழ்நாட்டில் இன்று மேலும் புதிதாக 1,859 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதுடன், மேலும்  28 பேர் பலியாகி உள்ளனர்.

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று இரவு வெளியிட்டுள்ள தகவலின்படி, மாநிலம் முழுவதும் இன்று மேலும் 1,859 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்பு 25,55,664 ஆக உயர்ந்துள்ளது.

இன்று மேலும் 28 பேர் தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்த நிலையில், இதுவரை பலியானோர் மொத்த எண்ணிக்கை 34,023ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும், 2,145 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 25,00,434 ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலையில் மாநிலம் முழுவதும் 21,207 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று ஒரே நாளில் 1,57,074 சோதனை செய்யப்பட்டு உள்ளது.

தொற்று பாதிப்பில் கோவை முதலிடத்தில் உள்ளது. அங்கு 188 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. 2வது இடத்தை தலைநகர் சென்னை பிடித்துள்ளது. அங்கு 181 பேரும், ஈரோட்டில் 166 பேருக்கும், செங்கல்பட்டில் 113 பேருக்கும், தஞ்சாவூரில் 102 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.