அதர்வா நடித்த ஈட்டி படத்தை இயக்கிய ரவி அரசு ஜீ.வி.பிரகாஷை வைத்து இயக்கிய படம் ஐங்கரன். நாயகி மகிமா நம்பியார்.
2017-ல் தொடங்கப்பட்ட இந்தப் படத்தை காமன்மேன் நிறுவனம் தயாரித்தது. பல்வேறு காரணங்களால் தாமதமாக தயாரான படம், இத்தனை ஆண்டுகளாக வெளியாகாமல் இருந்தது.
இந்நிலையில் ஐங்கரனை சோனிலிவ் தளத்தில் நேரடியாக வெளியிட உள்ளனர். இந்த தளத்தின் தமிழ் சினிமா ஒருங்கிணைப்பாளராக தயாரிப்பாளர் தனஞ்செயன் உள்ளார்.