சென்னை: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருத்தணி, உச்சி பிள்ளையார் உள்பட 5 கோவில்களில் விரைவில் ரோப் கார் வசதி செய்யப்படும்என அமைச்சர் சேகர்பாபு  தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, தமிழகத்தின் புராதான சிலைகள் 2 அமெரிக்காவிலும், 1 சிங்கப்பூரிலும் இருப்பதாக கூறப்படகிறது. இந்தசிலைகள் அங்கிருந்து விரைவில் தமிழகம் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு முழுவதும்  இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் முறையாக கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு வருகிறத.  அதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். முதல்கட்டமாக  180 கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருச்செந்தூர், சோளிங்கர், மருதமலை உள்ளிட்ட கோவில்களை தனியார் நிறுவனத்திடம் அளித்து, தேவையான வசதிகளை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக கூறியவர், தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களை புணரமைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருtதாகவும் கூறினார்.

தமிழகத்தில் முக்கிய மலைக் கோவில்களான திருத்தணி, சோளிங்கர், திருக்கழுக்குன்றம், திருச்சி, திருச்சங்கோடு ஆகிய இடங்களில் பொதுமக்கள் வசதிக்காக “ரோப் கார்” வசதி விரைவில் ஏற்படுத்தப்படும் எனவும் கூறியவர்,   மருதமலை கோவிலில் வயது முதிந்தோர் வசதிக்காக மின் தூக்கி அமைக்க திட்டமிடப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

திருக்கோவில்களில் காணிக்கையாக வந்த 2 ஆயிரம் கிலோ தங்கம் எந்த பயனும் இன்றி தேங்கி வைக்கப்பட்டுள்ளதாகவும், அவை அனைத்தும் வைப்பு நிதியாக போடப்பட்டு அதில் வரும் வட்டி, கோவில் பணிகளுக்காக பயன்படுத்த திட்டமிட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.