சென்னை: முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் பழனியப்பன் தொடர்ந்த வழக்கில், நீதிமன்றம் விஜயபாருக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டு உள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ந்தேதி நடைபெற்று மே 2ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இந்த தேர்தலில் விராலிமலை தொகுதியில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் போட்டியிட்டார். அவரை எதிர்த்து திமுக வேட்பாளர் பழனியப்பன் போட்டியிட்டார். தேர்தலில் திமுக வேட்பாளர் தென்னலூர் பழனியப்பனை விட 23,644 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

இந்த வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் பழனியப்பன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவரது மனுவில், வாக்காளர்களுக்கு விஜயபாஸ்கர் பணப்பட்டுவாடா செய்த சி.விஜயபாஸ்கர் வெற்றிபெற்றதாக குற்றம் சுமத்தி இருந்தார். இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி, பாரதிதாசன் விஜயபாஸ்கர் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு உள்ளார்.