டில்லி

ந்தியாவில் நேற்று 38,146 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,14,09,639 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 38,146 அதிகரித்து மொத்தம் 3,14,09,639 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 411 அதிகரித்து மொத்தம் 4,20,996 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 35,903 பேர் குணமாகி  இதுவரை 3,05,71,399 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 4,04,820 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 6,843 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 62,64,922 ஆகி உள்ளது  நேற்று 123 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,31,552 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,212 பேர் குணமடைந்து மொத்தம் 60,35,029 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 94,985 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 17,466 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 32,71,530 ஆகி உள்ளது.  இதில் நேற்று 66 பேர் உயிர் இழந்து மொத்தம் 16,036 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 15,247 பேர் குணமடைந்து மொத்தம் 31,14,741 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,40,275 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 1,001 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 28,94,557 ஆகி உள்ளது  இதில் நேற்று 22 பேர் உயிர் இழந்து மொத்தம் 36,374 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,465 பேர் குணமடைந்து மொத்தம் 28,34,741 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 23,419 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,808 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 25,48,497 ஆகி உள்ளது  இதில் நேற்று 22 பேர் உயிர் இழந்து மொத்தம் 33,911 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,447 பேர் குணமடைந்து மொத்தம் 24,91,222 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 23,364 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 2,252 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 19,54,765 ஆகி உள்ளது.  நேற்று 18 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 13,256 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,440 பேர் குணமடைந்து மொத்தம் 19,19,354 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 22,155 பேர் சிகிச்சையில் உள்ளனர்.