சென்னை: தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்கும் சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகள் அறிவித்து, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, கடந்த 20ந்தேதி அன்று 28,508கோடி ரூபாய் முதலீட்டில் 83,482 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கும் 49 திட்டங்களுக்கு அந்த நிறுவனங்களுடன் கையெழுத்திட்டது. இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்கும் சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து அரசாணை வெளியிட்டு உள்ளது.
அதில், சிறு குறு நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்கும் போது விதிமுறைகள் தளர்த்தப்பட்டு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டெண்டரில் பங்கேற்கும் நிறுவனத்துக்கு முன் அனுபவம் தேவையில்லை என்றும், டெண்டர் தொகை கட்ட தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.