கீழடி: தமிழகத்தில் நடைபெறும் அகழ்வாய்வில் அடுத்தடுத்து கிடைக்கும் அரிய கண்டுபிடிப்புகள் வியப்பையும், பண்டைய கால தமிழர்களின் அறிவுத்திறனையும் மெச்சுவதாக அமைந்துள்ளது.

கொற்கை அகழாய்வில் 7அடுக்கு செங்கல் கட்டுமானம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அதுபோல, கீழடி அகழாய்வுப் பணியில் முதல் முறையாக ஒரு விலங்கு உருவ பொம்மை கண்டறியப்பட்டது. ராமநாதபுரம் அருகே 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கீழடி, தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் கொற்கையில் தமிழக தொல்லியல் துறை சார்பில், அகழாய்வு பணிகள்நடைபெற்று வருகின்றன.

கொற்கையில் 75 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த பிப்ரவரி 26-ம் தேதி மீண்டும்அகழாய்வுப் பணி தொடங்கியுள்ளது. இங்கு தறபேது  பழமையான 7 அடுக்கு செங்கல் கட்டுமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் திரவப்பொருட்களை வடிகட்டும் 4 அடுக்கு கொண்ட சுடுமண்குழாய் கண்டெடுக்கங்பபட்ட நிலையில், தற்போது,  மற்றொரு குழியில் சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்புசங்க காலத்தில் பயன்படுத்திய 7 அடுக்கு கொண்ட செங்கல் கட்டுமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், அதே குழியில் இரும்பு, உருக்கு, கண்ணாடி மணிகள் மற்றும் வாழ்விட பகுதிகளைஉறுதிப்படுத்துவதற்கான அமைப்புகளும் காணப்படு கின்றன. இது தொல்லியல் ஆய்வாளர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம்  திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் 7-ம் கட்ட அகழாய்வு பணி நடந்து வருகிறது. கீழடியில் இதுவரை மண் பானை, காதில் அணியும்தங்க வளையல், பகடை, நெசவு தொழிலில் பயன்படும் தக்களி, கற்கோடாரி, கருப்பு, சிவப்பு நிற பானை ஓடுகள், மண் குவளைகள், சங்கு வளையல்கள், சுடுமண் மற்றும் கண்ணாடி பாசிகள், சூதுபவளம் படிகம், எடைக்கற்கள், அரிவாள், ஆணி, சிறிய செப்பு மோதிரம், உறைகிணறுகள் போன்றவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கொந்தகையில் 7-க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள், 10-க்கும் மேற்பட்ட முதுமக்கள்தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. அகரம் அகழாய்வில் சுடுமண் பெண் பொம்மை கண்டெடுக்கப்பட்டது. மேலும் உடைந்த நிலையில் ஒரு உறைகிணறும் கண்டறியப்பட்டது. இந்நிலையில் கொந்தகையில் அருகருகே முதுமக்கள்தாழி, இறுதிச் சடங்குக்கு பயன்படுத்தப்பட்ட பானை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கீழடி ஏழாவது கட்ட  அகழாய்வுப் பணியில் முதல் முறையாக ஒரு விலங்கு உருவ பொம்மை கண்டறியப்பட்டுள்ளது.  கீழடி, அகரம், மணலூர் மற்றும் கொந்தகை ஆகிய நான்கு அருகருகில் உள்ள இடங்களில் நடைபெறுகிறது. இங்கு சமீபத்திய கண்டுபிடிப்பாக சுடுமண்ணால் ஆன அடையாளம் தெரியாத ஒரு விலங்கின் உடல் பாகத்தின் உருவ பொம்மை அகரம் தளத்தில் கிடைத்துள்ளது. இந்த விலங்கு பொம்மையின் கால், தலை மற்றும் வால் பகுதிகள் கிடைக்கவில்லை. இந்த பொம்மை அகலத்தில் பத்து சென்டிமீட்டருக்கு குறைவாகவும், நான்கு சென்டிமீட்டர் உயரத்தையும் கொண்டதாக இருக்கிறது என்று கூறுகிறார் தொல்லியல் துறை துணை இயக்குனர், கீழடி அகழாய்வின் இயக்குநருமான ஆர். சிவானந்தம்.

ஏழாம் கட்ட அகழாய்வில் அகரத்தில் மட்டும் விலங்கு உருவ பொம்மை, சுடுமண்ணால் ஆன பெண் முகம், இரண்டு செம்பு நாணயங்கள், புகைப்போக்கி குழாய் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன. இதில் அதிக அளவில் கண்ணாடி, யானை தந்தம் மற்றும் சங்கினால் ஆன வளையல்கள் அடங்கும்.

அவை கிடைத்தால்தான் அது என்ன விலங்கு என்று கூற இயலும். நான்காம் கட்டப் பணிகளின் போது சுடுமண்ணால் ஆன குதிரையின் முகம் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு பிறகு இப்போதுதான் ஒரு விலங்கு உருவ பொம்மை (animal figurine) கிடைத்துள்ளது. ஏற்கனவே இந்த பகுதியில்  ஆடு, மாடு, மயில், கோழி, மான் மற்றும் காட்டு பன்றிகளின் எலும்புகள் நான்காம் கட்டத்தில் கிடைத்தது.

ராமநாதபுரம் அருகே 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழைமையான பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் அருகே உள்ள  குளத்தூர் கிராமத்தின் காலனியின் கிழக்கே காரான்கோட்டை என்ற இடத்தில் பண்ணைக்குட்டை தோண்டியபோது, பானை ஓடுகள் வெளிவந்துள்ளன. இதனைத்தொடர்ந்து அவ்விடத்தில்  ஆய்வுகள் நடத்தப்பட்டது. அப்போது தோண்டப்பட்ட குழியில்,  கருப்பு சிவப்பு நிறத்திலான சுடுமண் தட்டுகளின் உடைந்த பகுதிகள், சிவப்பு நிற பானை ஓடுகள், கெண்டியின் நீர் ஊற்றும் பகுதி, இரும்புத் தாதுக்கள், இரும்புக் கழிவுகள், தானியங்கள் வைக்க பயன்படுத்தப்பட்ட குலுமையின் தடித்த ஓடுகள், உடைந்த பானைத்தாங்கி, பானை மூடிகள்,அறிய வகை மான் கொம்புகள் மற்றும் ‘த’ என்கிற குறியீடுகளுள்ள 3 பானை ஓடுகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன.

இதில் மூன்று கோடுகள் ஒரு புள்ளியில் சந்திக்கும் திரிசூலம் போன்ற குறியீடு கீழடியிலும், மரியராயபுரத்திலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் ‘த’ எனும் தமிழ் எழுத்து, சூலம் ஆகிய குறியீடுகளும் கிடைத்துள்ளன.  இரும்புக் கழிவுகளுடன் உடைந்த உருக்காலையின் சிறிய பகுதியும் கிடைத்துள்ளதால் இங்கு இரும்பு உருக்காலை செயல்பட்டிருக்கலாம் என தெரிகிறது மேலும் கண்டெடுக்கப்பட்ட பொருட்களைக் கொண்டு 2000 ஆண்டுகளுக்கு முன்பு இரும்புக்காலத்தில் காரான்கோட்டை என்ற பெயரில் ஒரு சிற்றூர் இங்கு இருந்ததை அறிய முடிகிறது. மருத்துவக் குணமுள்ள காரான் என்ற ஒரு பாரம்பரிய நெல்லின் பெயரில் இப்பகுதி அழைக்கப்படுகிறது இதேபெயரில் ரெகுநாதபுரம் அருகில் ஒரு ஊர் உள்ளதும் குறிப்பிடத்தக்கது என தொல்லியல்துறை ஆய்வாளர் ராஜகுரு கூறினார்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகத்தில் நடைபெறும் அகர்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்டு வரும் பொருட்களை காணும்போது, பண்டைய தமிழன் கி.மு., கி.பி. முன்னரே வாழ்ந்து வந்துள்ளதும், அப்போதே பல்வேறு அரிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி வாழ்ந்து வந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.